LATEST NEWS
நீயா? நானா? எபிசோடை பார்த்து எமோஷனல் ஆன பிரபல இயக்குனர்…? அப்படி என்ன நடந்தது… யார் அந்த இயக்குனர்…?
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பபடும் ஒரு நிகழ்ச்சி தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சி இரு தரப்புகளுக்கிடையே விவாதம் செய்வது போன்ற நிகழ்ச்சி. இதில் கோபிநாத் என்பவர் தொகுப்பாளராக இருந்து மிக சிறப்பாக இந்த ஷோவை நடத்தி வருகிறார். ஞாயிறு தோறும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பல விதமான தலைப்பில் விவாதம் நடக்கும்.
அப்படிதான் இந்த வார எபிசோடில் நடந்த சம்பவம் அனைவரையும் நெகிழ செய்தது. கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அதில் பேசிய மனைவி தன் கணவனுக்கு படிப்பறிவே இல்லை என அனைவரின் முன்னிலையிலும் கேலி செய்தார். அது மட்டும் இல்லாமல் தன் மகளின் ப்ராகிரஸ் கார்டு கூட எழுத்துக்கூட்டி தான் படிப்பார் என மீண்டும் ஏளனம் செய்தார்.
இதை கேட்ட கோபிநாத் ஆவேசப்பட்டார். ஆனால் அவர்களின் மகள் தன் அம்மாவின் பேச்சிற்கு தக்க பதிலடி கொடுத்தார். என் அப்பா தோக்கல அவரை தோக்க விடமாட்டேன் அவருக்காக நல்லா படிப்பேன் என சொன்னதும் அரங்கமே அப்பா மகளை பாராட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழிச்சியில் ஆழ்த்தியது.
இதை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அந்த தந்தையயை பாராட்டும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் “மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று” என்ற வரிகளோடு ஷேர் செய்து நெகிழ்ச்சி அடைந்த பதிவு இதோ…
❤️❤️❤️❤️❤️ மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று ❤️😍😍😇😇 https://t.co/AR4Z9pHaV3
— Vignesh Shivan (@VigneshShivN) September 12, 2022
