LATEST NEWS
மோசமான நிலையில் எஸ்.பி.பி…. குறையத் தொடங்கிய இதயத்தின் செயல்பாடுகள்! மருத்துவ அறிக்கை கூறுவது என்ன?
பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை. கடந்த 5-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகின்றன. நுரையீரல் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர, உயிர்காக்கும் உபகரணங்கள் வழியாக, ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகின்றது.
அவருக்கு உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சுவாசிப்பதால், ‘க்ரிட்டிகல்’ என்றே, மருத்துவ ரீதியில் குறிப்பிட வேண்டியுள்ளது. பாடகர் எஸ்பிபி-யின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது எனவும், அவருக்கு தொடர்ந்து ECMO மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி எஸ்பிபி உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. மேலும் நுரையீரலில் ர த்தக்க சிவு நேரிட்டுள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்களும், திரையுலகினரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
