LATEST NEWS
400 ஒரு கோடி பட்ஜெட்… சலார் படத்தால் பிரபாஸுக்கு இப்படி ஒரு நிலைமையா?.. காரணம் என்ன..??

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். பாகுபலி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவரின் நடிப்பில் வெளியான சாஹா மற்றும் ராதே ஷ்யாம் என்ற இரண்டு திரைப்படங்கள் வெளியாகிறது. ஆனால் அந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தராத நிலையில் அடுத்ததாக இவரின் நடிப்பில் ஆதி புருஸ் திரைப்படமும் தொடர்ந்து தோல்வியை தழுவியது.
இந்நிலையில் கேஜிஎப் திரைப்படத்திற்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் சலார் திரைப்படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார். ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருள் செலவில் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
படத்தின் ஒளிபரப்பு உரிமையை எந்த ஒரு நிறுவனமும் வாங்க முன் வராததால் படம் ரிலீஸ் ஆகும் தேதியை தள்ளி வைத்துள்ளனர். பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியதால் ஒளிபரப்பு உரிமையை வாங்க எந்த ஒரு நிறுவனமும் உன் வராததால் தற்போது படம் ரிலீஸ் ஆகும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.