நடிகை நயன்தாரா திடீரென இன்ஸ்ட்டாவில் கணக்கு தொடங்க என்ன காரணம் தெரியுமா?.. வெளியான சீக்ரெட்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை நயன்தாரா திடீரென இன்ஸ்ட்டாவில் கணக்கு தொடங்க என்ன காரணம் தெரியுமா?.. வெளியான சீக்ரெட்..!!

Published

on

தென்னிந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தனது இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மறுபக்கம் சினிமாவிலும் பிஸியாக இருக்கும் நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பட குழுவினர் அனைவரும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா பொதுவாக எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. அதனைப் போலவே ஜவான் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் படக்குழுவினர் எவ்வளவோ அழைத்தும் நயன்தாரா அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படும் சாருக் கான் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து தன்னுடைய ஜவான் படத்தின் பிரமோஷனுக்காக மேடையில் அனிருத்துடன் ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

Advertisement

ஆனால் நடிகை நயன்தாரா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. துபாய் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறும் ஜவான் ப்ரோமோஷனிலும் நயன்தாரா ஈடுபடாததால் படக்குழு இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி அதிலாவது ஜவான் படத்தின் ப்ரோமோஷன் குறித்த போஸ்ட் போடுங்கள் என்று கேட்டுள்ளனர். இதன் காரணமாகவே இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்த நயன்தாரா அந்த படத்தின் டிரைலரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ப்ரொமோட் செய்திருந்தார். இதற்காகத்தான் நயன்தாரா இன்ஸ்டா கணக்கு தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in