‘பிக் பாஸ்’ போட்டியாளர் காயத்ரி ரகுராமின் அழகிய குடும்ப புகைப்படக்கள் – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘பிக் பாஸ்’ போட்டியாளர் காயத்ரி ரகுராமின் அழகிய குடும்ப புகைப்படக்கள்

Published

on

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சூழலில் ஒன்று ‘பிக் பாஸ்’.

இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுப்பலராக பணியாற்றினார். பிக் பாஸ் சீசன் 1 னில் போட்டியாளராக  சினேகன், ஆரவ் , வையாபுரி,  ஹரிஷ் கல்யாண்,  கணேஷ் வெங்கட்ராமன், ஜூலி, காயத்ரி ரகுராம், ஆர்த்தி போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கலந்தது கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடன இயக்குனர் காயத்ரி. இவர் சென்னையில் சேர்ந்தவர். இவர் தந்தை ரகுராம் தாய் கிரிஜா ரகுராம் இவர்கள் இருவரும் நடன அமைப்பாளர்.

இவருக்கு சுஜா என்ற ஒரு அக்காவும் உள்ளார். இவரும் ஒரு நடன கலைஞர். நடிகை காயத்ரி  2001 ஆம் ஆண்டு வெளியான ‘ராபலெல்லோ ராதா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

Advertisement

அதை தொடர்ந்து இவர் தமிழில் 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘சார்லி சாப்ளின்’ என்ற படத்தின் மூலமாக நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  இவர் தமிழில் ஸ்டைல்,  விசில்,  பரசுராமன்,  விகடன்,  வானம்,  வை ராஜா வை போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு திரைப்படங்களில் dance  choreographi யாக அறிமுகமானார்.  நடன இயக்குனர் காயத்ரி ரகுராம்  கலிபோர்னியாவில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகர்என்பவரை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

அதன் பிறகு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். நடிகை காயத்ரி 2014 ஆம் ஆண்டு பி ஜே பி தலைவர் அமித் ஷா முன்னிலையில் 2014 ஆம் ஆண்டு கட்சியின் இணைந்தார்.அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கலைகளுக்கான பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இவர் ஓடி விளையாடு பாப்பா, மிஸ்டர் சின்னத்திரை போன்ற  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in