VIDEOS
எனக்கு தமிழ் கெட்ட வார்த்தை தெரியும்… LGM ஆடியோ லாஞ்சில் தோனி மனைவி கலகல பேச்சு…!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன்னுடைய பட தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக LGM என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தோனி அவரின் மனைவி சாக்ஷி தோனியுடன் பங்கேற்றார். மேலும் பட குழுவினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜாலியாக பேசிய தோனி மனைவி , எனக்கு தமிழில் சில கெட்ட வார்த்தைகள் தெரியும் . ஆனால் தோனிக்கு தமிழில் கெட்ட வார்த்தைகள் தெரியாது, மற்ற மொழி கெட்ட வார்த்தைகள் தான் தெரியும், ஆனால் நான் அவருக்கு எந்த கெட்ட வார்த்தையும் கற்பிக்கவில்லை என்று ஜாலியாக அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Sakshi Dhoni – “I know some Tamil bad words”😂💛#MSDhoni #LGM
— ♚ (@balltamperrer) July 11, 2023
