LATEST NEWS
“ட்ரோல் பண்ணாலும் கவலையில்லை”… கணவருக்கு பாத பூஜை செய்த நடிகை பிரணிதா சுபாஷ்… வைரல் புகைப்படம்..!!
தமிழில் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அதனைத் தொடர்ந்து சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் பூஜ்: தி பிரைட் ஆப் இந்தியா, ஹங்கமா என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த வருடம் தொழிலதிபர் நிதின் ராஜன் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் எடையை குறைத்த பிரணிதா மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று bheemana amavasya என்பதால் அவரின் கணவரின் பாதங்களுக்கு பூஜை செய்துள்ளார்.
அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு கடந்த வருடம் போல ட்ரோல்கள் வந்தால் எனக்கு கவலை இல்லை, இந்து மத சடங்குகள் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
