ஜவான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்… துப்பாக்கியுடன் மிரட்டும் நயன்தாரா… செம மாஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜவான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்… துப்பாக்கியுடன் மிரட்டும் நயன்தாரா… செம மாஸ்..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தனது இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் நயன்தாரா தற்போது பாலிவுட் திரையுலகில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதாவது அட்லி இயக்கத்தில் அடுத்ததாக வெளிவர உள்ள ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்த நயன்தாரா ஹீரோயினியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நடிகை நயன்தாரா மூன்றே மூன்று ஷார்டில் மட்டுமே தோன்றி செம்ம மாஸ் காட்டினார். இந்நிலையில் ஜவான் பட குழுவினர் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் நயன்தாரா துப்பாக்கியுடன் மிரட்டியுள்ளார். தற்போது நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in