CINEMA
பாலிவுட்டில் புதிய தடம் பதித்த தமிழ் இயக்குனர்… ஜவான் திரைப்படம் எப்படி இருக்கு.. வெளியான விமர்சனம்..!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் அட்லி இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய நான்கு தமிழ் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்துள்ள நிலையில் முதல் முறையாக ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் இயக்குனர் அட்லி இயக்கிய திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் அனைவரும் திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். நான்கு வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் இந்த வருடம் வெளியான பதான் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் தற்போது அட்லீ இயக்கத்தில் வெளியாகி உள்ள ஜவான் திரைப்படம் 4 ஸ்டார் ரேட்டிங் என்றும் பிளாக் பஸ்டர் என்றும் ரசிகர்கள் தங்களின் விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
பட்டாசை எல்லாம் கடந்து தற்போது ஜவான் படத்தின் ரிலீஸ் முன்னிட்டு மேளதாளத்துடன் கலர் பவுடரை எல்லாம் கொட்டி தியேட்டரை ஹோலி கொண்டாட்டம் போல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அட்லி மற்றும் ஷாருக்கான் ரசிகர்கள் ஏகப்பட்ட வீடியோ மற்றும் மீம்களை பதிவிட்டு அடுத்த ஆயிரம் கோடி ரெடி எனவும் ஜெயிச்சிட்டா அட்லி எனவும் கூறி பதிவிட்டு வருகிறார்கள். தனது பண ஆதாயத்திற்காக நாட்டையே சுடுகாடாக மாற்ற முயற்சிக்கிறான் வில்லன். அவனால் பாதிக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி கூட்டாக அவனை அழிக்க முயற்சிக்கிறார் ஹீரோ. இதுதான் படத்தின்கதை . இடையிடையே சில திகைப்பூட்டாத ட்விஸ்ட். பழகிப்போன அதே பழிவாங்கல்கள்.
ஜவான் படத்தில் ஷாருக்கான் ஏகப்பட்ட கெட்டப்புகளில் தன்னுடைய மொத்த நடிப்பையும் இறக்கியுள்ளார். ஆக்சன்,மாஸ், மிரட்டல், நடிப்பு மற்றும் எமோஷன் என அனைத்தையும் ஷாருக்கானுக்காகவும் ரசிகர்களுக்காகவும் அட்லி எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ள நிலையில் தற்போது ஜவான் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.