LATEST NEWS
மாரடைப்பால் இறந்துவிட்டாரா பொல்லாதவன், வாரணம் ஆயிரம் நடிகை?.. உண்மை என்ன?.. புகைப்படத்துடன் தோழி வெளியிட்ட தகவல்..!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா 40 வயது ஆகும் நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது. இவர் தமிழில் குத்து, பொல்லாதவன் மற்றும் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இந்நிலையில் சில மணி நேரத்திற்கு முன்பு இவர் உயிரிழந்து விட்டதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர் ஜெனிவாவில் உடல் நலத்துடன் உள்ளதாக அவரது தோழி சமூக வலைத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார். நாளை பெங்களூரு திரும்புவார் எனவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் புகைப்படங்கள் பதிவிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க