குஷி திரைப்பட வெற்றியை கொண்டாட… 100 குடும்பங்களுக்கு விஜய் தேவரகொண்டா வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷி திரைப்பட வெற்றியை கொண்டாட… 100 குடும்பங்களுக்கு விஜய் தேவரகொண்டா வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Published

on

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் குஷி. விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து இந்த திரைப்படத்தில் சமந்தா நடித்திருந்த நிலையில் முழுக்க முழுக்க இது ஒரு காதல் கதை கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, ரோகிணி மற்றும் சரண்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தெலுங்கில் உருவான இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்திய ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வெளியானது.

இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில் மூன்றே நாட்களில் 70 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டே நிகழ்ச்சியுடன் பேசினார். அதேசமயம் குஷி திரைப்பட வெற்றிக்கு ஒரு கோடியை மக்களுடன் பகிர்ந்து கொண்டால்தான் தூக்கம் வரும் எனவும் அதற்காக 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

Advertisement

இதனை தொடர்ந்து அதற்கான அறிவிப்பையும் படிவத்திற்கான லிங்கையும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ளார். அந்த படிவத்தை பூர்த்தி செய்யும் நபர்களில் 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இதனை பரிசளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஏழை குடும்பங்களுக்கு படிப்பு அல்லது மருத்துவ செலவுக்கு இந்த பணம் உதவினால் மகிழ்ச்சியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ள நிலையில் தற்போது அவரை நீங்கள் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

 

Advertisement

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in