யோவ் நீயெல்லாம் ஒரு மனுசனா?.. துணிவு ரிலீஸ் நேரத்தில் இயக்குனர் ஹெச்.வினோத் செய்த செயல்… சுவாரசிய சம்பவம்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

யோவ் நீயெல்லாம் ஒரு மனுசனா?.. துணிவு ரிலீஸ் நேரத்தில் இயக்குனர் ஹெச்.வினோத் செய்த செயல்… சுவாரசிய சம்பவம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ஹெச்.வினோத். இவர் இறுதியாக துணிவு திரைப்படத்தை இயக்கி இருந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனின் KH233 திரைப்படத்தை இவர் இயக்க உள்ளார். இந்நிலையில் துணிவு திரைப்படம் ரிலீஸ் நேரத்தில் சபரிமலையில் அவருடன் இருந்த இயக்குனர் சரவணன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், அஜித் சாரின் துணிவு திரைப்படம் வெளியான சமயத்தில் இயக்குனர் வினோத்துடன் நாங்கள் சபரிமலையில் இருந்தோம். நல்ல கூட்டம் இருந்ததால் அருகே ஒரு அரை எடுத்து தங்கினோம். துணிவு திரைப்படம் குறித்த ரிசல்ட் பாசிட்டிவாக இருந்தாலும் விமர்சனம் பற்றி தெரிந்து கொள்வதற்கு அதிக ஆவலாக இருந்தோம். சபரிமலையில் கவரேஜ் கிடைக்காததால் கவரேஜ் தேடி ஓடிக் கொண்டிருந்தோம்.

படம் பக்கா என்று விமர்சனங்கள் வந்ததும் அறைக்கு ஓடி வந்தேன். அப்போது கையை தலையணை போல வைத்துக் கொண்டு கால் நீட்டி வினோத் தூங்கிக் கொண்டிருந்தார். யோவ் நீயெல்லாம் மனுஷனாய்யா என எழுப்பினேன். நல்ல உறக்கத்தில் இருந்த வினோத் சலித்தபடி நிமிர்ந்தார். படத்தைக் கழுவிக் கழுவி ஊத்துறாங்க, நீங்க தூங்கிட்டு இருக்கீங்க? ஊத்தட்டும் விடுய்யா ன்றபடி மீண்டும் படுத்துக் கொண்டார்.

ஐயோ, நண்பா  படம் சூப்பர்னு கொண்டாடுறாங்க என்றேன். சரிய்யா எழாமலே பதில் சொல்லித் தூக்கத்தைத் தொடர்ந்தார். ‘திங்க் மியூஸிக்’ சந்தோஷ் வந்து ஆளைப் புரட்ட, அப்போதும் வேண்டா வெறுப்பாகத்தான் எழுந்தார். நாம செய்ய வேண்டிய வேலையைச் செஞ்சுட்டோம். படம் நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் இனி நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது. வாழ்த்தினாலும் வறுத்தாலும் ஏத்துக்கத்தான் வேணும் என்றார். அறிவில், தெளிவில் அப்படியோர் அரக்கன் வினோத். எவராலும் சலனப்படுத்த முடியாத சக்தி. நல்லதும் கெட்டதும் நமக்குள்தான் என்று இயங்குகிற அபூர்வனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.