LATEST NEWS
மரணப் படுக்கையில் இருக்கும் போது என் அம்மா இந்த வார்த்தையை தான் சொன்னாங்க… நடிகை வனிதா விஜயகுமார் உருக்கம்..!!

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்த மஞ்சுளா 1976 ஆம் ஆண்டு நடிகர் விஜயகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் விஜயகுமாரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் விஜயகுமாரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு. அவருக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளன. அதனைப் போலவே மஞ்சுளாவிற்கும் விஜயகுமாருக்கும் வனிதா, ஸ்ரீதேவி மற்றும் ப்ரீதா ஆகிய மூன்று பெண் பிள்ளைகள் பிறந்தனர்.
ஒரு கட்டத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் வனிதா வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் அவரின் தாய் மஞ்சுளா மரணப்படுக்கையில் இருந்து அவரை நேரில் சந்தித்து பேசி சமாதானம் அடைந்ததாக சில வருடங்களுக்கு முன்பு வனிதா ஒரு பேட்டியில் கூறி இருந்தார். நம்முடைய சொத்தில் உனக்கும் ஒரு பங்கு உண்டு, அவர்கள் நிச்சயம் உன்னை ஏமாற்றி விடுவார்கள்.
நான் இருக்கும்போதே அவற்றைக் கேட்டு பெற்றுக்கொள் என்று தன் தாய் கூறியதாகவும் உன்னை விட எனக்கு சொத்து பெரிதல்ல என்று தான் தனது தாய் மஞ்சுளாவிடம் கூறியதாக பணிதா உருக்கமாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய தாய் உயிருடன் இருக்கும் போது அவருடைய ஆசைக்கு தலையை அசைத்த தந்தை விஜயகுமார் தாய் மறைந்த பிறகு தன்னை மீண்டும் ஒதுக்கி விட்டதாக வனிதா உருக்கமாக பேசியுள்ளார்.