VIDEOS
“எனக்கு ரொம்ப வருஷமா மொட்டை போடணும்னு ஆசை”… இதுதான் காரணம்… நடிகை காயத்ரி சங்கர் ஓபன் டாக்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை காயத்ரி சங்கர். சினிமாவில் குடும்பப் பாங்கான பெண்ணாக நடிக்கும் நடிகைகளின் பட்டியலில் இணைந்தவர். இவர் முதல் முதலில் 18 வயசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் பெரும்பாலும் விஜய் சேதுபதியின் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவருக்கான ராசியான நடிகையாக திகழ்ந்த காயத்ரி, விக்ரம் படத்தில் அவரை கொள்ளும் வில்லனாகவும் விஜய் சேதுபதி உடன் நடித்திருப்பார் .
இந்நிலையில் காயத்ரி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நிலையில் அப்போது, திரைப்படங்களில் நடிப்பதற்காக அதைப் பொறுத்து தன்னுடைய ஹேர் ஸ்டைல் இருந்து வந்ததாகவும் சுமார் பத்து வருடங்களாக தனக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
