‘ரோஜா’ பட நடிகையை 32 வருடங்களுக்கு பிறகு சந்தித்த அரவிந்த் சாமி… இதுதான் காரணமா?… புகைப்படம் வைரல்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘ரோஜா’ பட நடிகையை 32 வருடங்களுக்கு பிறகு சந்தித்த அரவிந்த் சாமி… இதுதான் காரணமா?… புகைப்படம் வைரல்…

Published

on

தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அரவிந்த்சாமி, முதல் படத்திலேயே தனது அபார நடிப்பால் ரசிகர்கள் மனதில் கொள்ளை கொண்டார். அதன்பிறகு இவர் நடித்த “ரோஜா” திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக மதுபாலா நடித்திருந்தார்.

கே.பாலச்சந்தர் தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். ரோஜா திரைப்படம் மட்டும் இல்லாமல், அதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனது. அது மட்டும் இல்லாமல் இந்த ஒரு படத்தின் மூலம் பல பெண் ரசிகைகளை தனதாக்கி கொண்டார் அரவிந்த்சாமி.

Advertisement

ரோஜா படத்தில் ரிஷி குமார் என்ற கேரக்டரில் அரவிந்த் சாமியும், அவருக்கு ஜோடியான ரோஜா கேரக்டரில் மதுபாலாவும் நடித்திருந்தனர். கிராமத்தில் அக்காவை பெண் பார்க்கச் செல்லும் அரவிந்த் சாமி, மதுபாலாவை பிடித்திருக்கு என சொல்ல, அங்கிருந்து தொடங்கும் கதை காஷ்மீர் அழகியலில் சிலிர்க்க வைக்கும். முன்னதாக அரவிந்த் சாமி பெண் பார்க்கச் செல்லும் காட்சியில் வைஷ்ணவி நடித்திருப்பார்.

இதைத்தொடர்ந்து அரவிந்த் சாமியும் வைஷ்ணவியும் இணைந்து நடிக்காத நிலையில், தற்போது இந்த ஜோடி திடீரென சந்தித்துக் கொண்டது. அரவிந்த் சாமியிடம் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை என்றாலும் வைஷ்ணவி சுத்தமாக ஆளே மாறிவிட்டார். கறுப்பு நிற சுடிதார் அணிந்தபடி அரவிந்த் சாமி அருகில் நின்று போட்டோ எடுத்துள்ளார் வைஷ்ணவி.

Advertisement

இத்திரைப்படம் 1992 ஆகஸ்ட் 15ம் தேதி ரோஜா திரைப்படம் வெளியானது. நாளை இந்தப் படம் வெளியாகி 32வது ஆண்டை நிறைவுசெய்யும் நேரத்தில், அதில் நடித்த அரவிந்த் சாமியும் வைஷ்ணவியும் சந்தித்துள்ளனர். தற்பொழுது இப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in