‘மீனா எங்க இலங்கைக்கு போறீங்களா?’… சுதந்திர தின வாழ்த்து கூறி  வீடியோ வெளியிட்ட கம்பம் மீனா… கலாய்க்கும் ரசிகர்கள்…   – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘மீனா எங்க இலங்கைக்கு போறீங்களா?’… சுதந்திர தின வாழ்த்து கூறி  வீடியோ வெளியிட்ட கம்பம் மீனா… கலாய்க்கும் ரசிகர்கள்…  

Published

on

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகப் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. அதில் வீட்டு வேலைக்கார பெண்ணாக செல்வி கதாபாத்திரத்தில் கம்பம் மீனா நடித்து வருகிறார். அந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

தற்போது துணை நடிகையாக இருக்கும் இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் நடந்துள்ளது. பின்னர் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.தன்னுடைய குடும்ப வறுமை நிலை காரணமாக எல்ஐசி ஏஜென்ட் ஆக கம்பம் மீனா பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் இவரை பாரதிராஜா நடிக்க வைத்துள்ளார்.

Advertisement

இவர் கிராமத்து வழக்கு முறையில் பேசி அனைவரையும் சிரிக்க வைத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதேசமயம் தெற்கத்தி பொண்ணு சீரியல் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் அமைந்தது. அதன் பிறகு வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இதுவரை தமிழில் கிட்டத்தட்ட 75 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

சிறுவயதில் தந்தையை இழந்து திருமணம் என்றாலும் தன்னுடைய வாழ்வில் பல தடைகளைக் கடந்து இன்று ரசிகர்கள் பலரும் கொண்டாடும் நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கம்பம் மீனா. தற்பொழுது இவர் படகில் சென்றபடி வீடியோ வெளியிட்டு சுதந்திர தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘மீனா எங்க இலங்கைக்கு போறீங்களா?’என்று கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Meena Sellamuthu (@kambam_meena_sellamuthu)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in