தனுஷின் 51-வது படத்தில் இணைந்த 27 வயது இளம் நடிகை… மகிழ்ச்சியுடன் அவரே வெளியிட்ட அதிகாரபூர்வமான அறிவிப்பு… - cinefeeds
Connect with us

LATEST NEWS

தனுஷின் 51-வது படத்தில் இணைந்த 27 வயது இளம் நடிகை… மகிழ்ச்சியுடன் அவரே வெளியிட்ட அதிகாரபூர்வமான அறிவிப்பு…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். . இந்த ஆண்டு இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான ‘வாத்தி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இப்படத்தையடுத்து தனுஷ் தமிழில் தனது 50 வது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘D50’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் ‘வடசென்னை 2’, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisement

அதை தொடர்ந்து இந்தியில் பிரபல திரைப்படமான ‘ராஞ்சனா’, ‘அத்ரங்கி ரே’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் தனுஷ். ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடதக்கது.

தற்போது அருண் மாதேஸ்வரன் நடிப்பில் உருவாகிவரும் ’கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பூஜை கடந்த ஆண்டு நடைபெற்றாலும் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

Advertisement

இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்போது படத்தில் ராஷ்மிகா நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் விடியோவாக வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Bhuvanesh S (@bujji5749)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in