FLASH: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மிக முக்கிய கோப்புகள் இணையத்தில் கசிவு.. பெரும் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மிக முக்கிய கோப்புகள் இணையத்தில் கசிவு.. பெரும் அதிர்ச்சி..!!

Published

on

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை வரைபடங்கள், வெண்டிலேஷன் கட்டமைப்பு உள்ளிட்ட 19,000 முக்கியக் கோப்புகள் டார்க் வெப் தளத்தில் கசிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் சர்வரிலிருந்து இந்த முக்கியமான தரவுகள் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேசப் பாதுகாப்புடன் தொடர்புடைய இந்த மிக முக்கியமான தரவுக் கசிவு குறித்து ஒன்றிய அரசின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு தற்போது தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

அணுமின் நிலையத்தின் மிக ரகசியமான உள் கட்டமைப்பு விவரங்கள் இணையத்தில் கசிந்திருப்பது பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தரவுகள் எவ்வாறு திருடப்பட்டன, இதன் பின்னணியில் உள்ள ஹேக்கர்கள் யார் என்பது குறித்தும், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்தும் பாதுகாப்பு முகமைகள் முழுவீச்சில் ஆய்வு செய்து வருகின்றன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in