பயமா? எனக்கா? நீங்க எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு வரேன்… போலீஸ் விசாரணை குறித்து எ.வ.வேலு சவால்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பயமா? எனக்கா? நீங்க எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு வரேன்… போலீஸ் விசாரணை குறித்து எ.வ.வேலு சவால்..!!

Published

on

காவல்துறையினரின் விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். விசாரணை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விசாரணைக்காக மீண்டும் எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகத் தயாராக இருக்கிறேன்; என் மடியில் கனமில்லை என்பதால் எனக்கு வழியில் எந்தப் பயமும் இல்லை” என்று மிகவும் துணிச்சலுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விசாரணைப் போக்கு குறித்துப் பேசிய அவர், காவல்துறை என்பது வெறும் அம்புதான், அதை எய்தவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ளார். இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை குறித்துத் தான் அஞ்சப்போவதில்லை என்றும், சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தனது பேட்டியில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in