LATEST NEWS
“என்னது… இப்படி பண்றாங்களா..?! ரஷ்யப் பெண்ணை குழப்பத்தில் ஆழ்த்திய.. இந்தியாவின் 5 விசித்திர பழக்கங்கள்… என்னனு தெரியுமா..!!”
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினருக்கு இங்குள்ள கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், இந்தியாவிற்கு வந்த ஒரு ரஷ்யப் பெண் தன் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், இந்தியாவிற்கு வந்த பிறகு தனக்கு ஏற்பட்ட 5 முக்கிய கலாச்சார அதிர்ச்சிகளைப் பட்டியலிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தைப் பெற்று வைரலாகி வருகிறது.
அவர் குறிப்பிட்டுள்ள முதல் அதிர்ச்சி, இந்தியாவில் மக்கள் தங்களுக்குள் பேசும்போது அடிக்கடி தலையை அசைப்பது ஆகும். இந்தத் தலை அசைவிற்கு என்ன அர்த்தம் என்பதைப் புரிந்து கொள்ள தமக்கு நீண்ட காலம் எடுத்ததாகக் கூறியுள்ளார். இரண்டாவதாக, இந்தியப் போக்குவரத்து நெரிசலும், வாகனங்கள் இடைவிடாது ஹாரன் சத்தம் எழுப்புவதும் அவருக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. மூன்றாவதாக, இங்குள்ள மக்கள் சமையலில் பயன்படுத்தும் அதிகப்படியான மசாலா மற்றும் காரமான உணவுகள் அவரது உணவுக் பழக்கத்திற்கு முற்றிலும் புதியதாக இருந்துள்ளது.
https://www.instagram.com/reel/DacxDEEIyQH/?utm_source=ig_web_button_share_sheet
மேலும், இந்தியாவில் மக்கள் தங்கள் கைகளாலேயே உணவு உண்பதை நான்காவது கலாச்சார அதிர்ச்சியாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, இங்குள்ள மக்கள் மிகவும் நட்பானவர்கள் என்றும், எங்கு சென்றாலும் தன்னிடம் வந்து செல்ஃபி எடுக்க விரும்புவதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த ஐந்து விஷயங்களும் ஆரம்பத்தில் தனக்கு அதிர்ச்சியாகவும் விசித்திரமாகவும் இருந்தாலும், இந்தியாவின் இந்த தனித்துவமான கலாச்சாரத்தை தான் தற்போது மிகவும் ரசிப்பதாக அந்த ரஷ்யப் பெண் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
