LATEST NEWS
யாரு சாமி நீங்களாம்..? சாலையோர மாடுகளுக்காக ரொட்டி ஆர்டர் செய்த பெண்… ஆனால் ஜொமேட்டோ டெலிவரி பாய் செய்த அந்த ஒரு விஷயம்… இணையத்தில் வைரலாகும் நெஞ்சை உருக்கும் காட்சி..!!
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பெண் ஒருவர் ஜோமாட்டோ செயலி மூலம் மூன்று ரொட்டிகளை ஆர்டர் செய்துள்ளார். அவர் வழக்கமாக ஒரு கோயிலுக்கு அருகில் இருக்கும் மூன்று ஆதரவற்ற பசியோடு உள்ள பசுக்களுக்கு தினமும் ரோட்டி செய்து வழங்குவது வழக்கம். ஆனால், அன்றைய தினம் அவர் அவசர வேலை காரணமாக வெளியே செல்ல வேண்டியிருந்ததால், பசுக்கள் பசியோடு இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஆன்லைனில் ரோட்டிகளை ஆர்டர் செய்துள்ளார்.
டெலிவரி பாய் குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், அந்தப் பெண் போன் மூலம் ஒரு அன்பான கோரிக்கையை வைத்துள்ளார். அந்த ரொட்டிகளை அங்குள்ள மூன்று பசுக்களுக்குத் தலா ஒன்று வீதம் ஊட்டிவிடுமாறு கேட்டுக்கொண்டார். வாய் பேச முடியாத விலங்குகள் மீது அந்தப் பெண் காட்டிய அக்கறையையும் பாசத்தையும் கண்டு நெகிழ்ந்துபோன டெலிவரி பாய், அந்த உணவிற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். மேலும், “இது அந்தப் பசுக்களுக்கு எனது பங்களிப்பாக இருக்கட்டும்” என்று கூறி தன் சொந்தச் செலவிலேயே அதை வழங்குவதாகக் கூறினார்.
https://www.instagram.com/reel/DaukYFoSHCH/?utm_source=ig_web_button_share_sheet
அதன் பின்னர், அந்த டெலிவரி பாய் தனது கைகளாலேயே அந்தப் பசுக்களுக்கு அன்போடு ரொட்டிகளை ஊட்டி மகிழ்ந்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான மற்றும் நெஞ்சை உருக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் அந்தப் பெண்ணின் கருணையையும், டெலிவரி பாயின் தாராள மனதையும் பாராட்டி, மனிதநேயம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது எனத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
