LATEST NEWS
“இந்த வயசுல உனக்கு டேட்டிங்கா..?” மாமியாருக்கு தர்மஅடி கொடுத்து எலும்புகளை உடைத்த மருமகள்… சீனாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரல்..!!
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஜியாக்ஸிங் நகரில், பேரக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளாமல் தனது ஆண் நண்பரை சந்திக்கச் சென்ற மாமியாரை மருமகள் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷென் என்ற அந்த முதியவர், தனது மகனின் இரு குழந்தைகளைப் பராமரித்து வந்துள்ளார். ஒரு நாள் ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாதபோது, வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் அதை அறிந்த தாய் பதற்றத்துடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மாமியார் தனது ஆண் நண்பரைச் சந்திக்கச் செல்ல விரும்புவதாகக் கூறியதால் மருமகள் ஆத்திரமடைந்துள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றியதில் மருமகள் தனது மாமியாரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் அந்த முதியவரின் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டதுடன், அவரது 4 விலா எலும்புகள் உடைந்துள்ளன. இந்தச் சம்பவத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட முதியவரின் சொந்த மகனே தனது தாய்க்கு ஆதரவாக நிற்காமல், தனது மனைவியின் செயலை நியாயப்படுத்தியுள்ளார். தங்களுக்குப் பொருளாதாரக் கஷ்டம் இருக்கும்போது தாய் தங்களுக்கு உதவாமல் தனது காதல் விவகாரத்தில் கவனம் செலுத்தியதால் இந்த அடிக்கு அவர் தகுதியானவர் தான் என மகன் கூறியுள்ளார்.
ஆனால், முதியவரின் மகள்கள் தங்களது சகோதரன் மற்றும் அண்ணிக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். தங்களது தாய் பல வருடங்கள் துப்புரவுத் தொழிலாளியாகக் கடின உழைப்பைச் செலுத்தியவர் என்றும், வாழ்க்கையின் இந்த வயதில் தனக்கான துணையைத் தேர்ந்தெடுத்து வாழ அவருக்கு முழு உரிமை உண்டு என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் சீன சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் விவாதத்தையும், மருமகளின் வன்முறைச் செயலுக்கு எதிரான நெட்டிசன்களின் கடுமையான கண்டனங்களையும் குவித்து வருகிறது.
