LATEST NEWS
அட ஜெயிலர் படத்தில் ரஜினி மகனாக முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானா?.. அவர் மட்டும் நடிச்சிருந்தா வேற லெவல்ல இருந்திருக்கும்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். உலகம் முழுவதும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். உலகம் முழுவதும் ஜெயிலர் திரைப்படம் சுமார் 300 கோடி வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியின் மகன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் வசந்த் ரவி நடித்திருந்த நிலையில் முதன் முதலில் இந்த ரோலில் நடிப்பதற்கு வசந்த் ரவி கிடையாதாம். அதாவது நடிகர் ஜெய் தான் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதிலாக வசந்த் ரவி இந்த கதாபாத்திரத்தில் நடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
