நடிகை சுசித்ராவுக்கு ‘பாக்கியலட்சுமி’ சீரியல் முதல் சீரியல் இல்லையாம்… அவர் நடித்த முதல் தமிழ் சீரியல் எது தெரியுமா?…  – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை சுசித்ராவுக்கு ‘பாக்கியலட்சுமி’ சீரியல் முதல் சீரியல் இல்லையாம்… அவர் நடித்த முதல் தமிழ் சீரியல் எது தெரியுமா?… 

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் குடும்பத்திற்காக தனது கனவை தியாகம் செய்து வாழும் பெண்ணாக பாக்கியா  கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இவரின் கணவராக கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் சதீஷின் நடிப்பிற்காக இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். இவருக்கென்று சமூக வலைத்தளங்களில் தனியாக கோபி ஆர்மி என்று உருவாக்கப்பட்டு ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் கோபியை விவாகரத்து செய்த பாக்கியா அடுத்தடுத்து தனது முயற்சியால் வளர்ந்து வருகிறார். ஆங்கிலம் கற்பது, கல்லூரி செல்வது, கேன்டீன் நடத்துவது என இப்படி ஏதையாவது செய்து பிஸியாகவே உள்ளார்.

Advertisement

இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் சுசித்ரா என்பவர் நடித்து வருகிறார். கன்னடம், தெலுங்கு என படங்களும் நடித்துள்ள இவர் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தான் தமிழ் சின்னத்திரை வந்துள்ளார் என நம்மில் பலர் நினைத்திருப்போம்.

ஆனால் அது உண்மையில்லை. நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன்பே, தமிழில் ‘மாங்கல்ய சந்தோஷம்’ என்ற தமிழ் தொடரில் முதலில் நடித்திருக்கிறாராம். தற்பொழுது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் ‘அடடே இத்தனை நாளா இது தெரியாம போச்சே’ என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in