பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ‘கேம் சேஞ்சர்’ படக்குழு… வெளியான புகைப்படங்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ‘கேம் சேஞ்சர்’ படக்குழு… வெளியான புகைப்படங்கள்…

Published

on

ஜென்டில்மேன் தொடங்கி எந்திரன் 2.0 வரை தொடர்ந்து தான் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பிரம்மாண்டத்தை நிகழ்த்து வருபவர் இயக்குனர் ஷங்கர். இதனாலேயே ரசிகர்களால் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கர், இன்று தனது 59-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது இயக்குனர் ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் தொடங்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக முடங்கிக் கிடந்த இந்தியன் 2 படத்தின் பணிகளும் தற்பொழுது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

தற்போது தில் ராஜூ தயாரிப்பில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாளை கேக் வெட்டி, படக்குழு கொண்டாடிய புகைப்படத்தை தயரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில் நடிகர் ராம் சரண், தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தற்பொழுது இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in