LATEST NEWS
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது ஹேர் ஸ்டைலை மாற்ற காரணம் என்ன தெரியுமா?.. அவரே சொன்னா சீக்ரெட்..!!

இந்திய அளவில் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு தமிழ் மற்றும் ஆங்கிலம் என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அதே சமயம் இரண்டு ஆஸ்கார் விருதை குறித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர் இவர்தான்.
இவர் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ராம் பானு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு அமீன் என்ற மகனும் கதீஜா ரகுமான் மற்றும் ரஹிமா ரகுமான் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவரின் மூத்த மகள் கதிஜாவிற்கு அண்மையில் தான் திருமணம் நடந்து முடிந்தது. ரியாஸ் என்ற சவுண்ட் இன்ஜினியர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கதீஜா.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானிடம் சமீபத்தில் உங்களது ஹேர் ஸ்டைல் மாற்றத்திற்கான காரணம் என்ன என்று கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு பதில் அளித்த அவர், என் மனைவி தான் காரணம் எனவும் அவரது பேச்சைக் கேட்க வேண்டும், அவருக்காக தான் என்னுடைய ஹேர் ஸ்டைலை நான் மாற்றிக் கொண்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.