தளபதி 68 படத்தில் ஹீரோயினியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை.. அவங்க யார் தெரியுமா..?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

தளபதி 68 படத்தில் ஹீரோயினியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை.. அவங்க யார் தெரியுமா..??

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் இருவரும் இணைந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. லியோ திரைப்படத்தில் அர்ஜுன், கௌதம் மேனன் மற்றும் திரிஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய் தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஆக்சன் என்டர்டெயின்மென்ட் ஜெனரில் உருவாக உள்ள இந்த படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.  தற்போது இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர்கள் தேர்வும் நடைபெறுகின்றது. இதில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றொரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை ஜோதிகாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு தான் உறுதி செய்ய முடியும். ஒருவேளை அப்படி விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா இந்த திரைப்படத்தில் நடித்தால் குஷி திரைப்படத்திற்கு பிறகு விஜய் உடன் இணைவதால் காம்பினேஷன் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைப் போலவே சிவகார்த்திகேயனின் தான் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த பிரியங்கா மோகனும் விஜயுடன் ஹீரோயினியாக நடிக்க உள்ள நிலையில் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in