அட்லீ இயக்கத்தில்… ஷாருக்கான், விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில்… வெளிவந்த ‘ஜவான்’ திரைப்படத்தின் தமிழ் ட்ரைலர் லான்ச் வீடியோ… வைரல்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட்லீ இயக்கத்தில்… ஷாருக்கான், விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில்… வெளிவந்த ‘ஜவான்’ திரைப்படத்தின் தமிழ் ட்ரைலர் லான்ச் வீடியோ… வைரல்…

Published

on

பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். ஜீரோ படத்தின் தோல்விக்கு பின்னர் அவர் நடிப்பில் ஐந்து ஆண்டுகளாக எந்த திரைப்படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பதான் என்கிற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் மாஸான கம்பேக் கொடுத்தார் ஷாருக்கான். பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன இது பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது.

இந்திய அளவில் இந்த ஆண்டு ரிலீசான படங்களில் அதிக வசூல் குவித்த படம் என்கிற பெருமையையும் பதான் பெற்றுள்ளது. பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் தான் ஜவான். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய அட்லீ தான் ஜவான் படத்தையும் இயக்கியுள்ளார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்க பிரியாமணி, யோகி பாபு சானியா ஐயப்பன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

Advertisement

அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இதனால் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக ஜவான் மாறியுள்ளது. மாஸ் கமெர்ஷியல் ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்த படம் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in