‘கண்ணு பட்டுரும் திருஷ்டி சுத்தி போடுங்க’… மொத்த குடும்பத்துடன் 77 -வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஜயகுமார்… வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘கண்ணு பட்டுரும் திருஷ்டி சுத்தி போடுங்க’… மொத்த குடும்பத்துடன் 77 -வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஜயகுமார்… வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்…

Published

on

தமிழ் திரையுலகின் மூத்த நடிகராக இருப்பவர் விஜயகுமார். இவர் அதிக அளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இவருக்கு முத்துகண்ணு மற்றும் மஞ்சுளா இன்று இரண்டு மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவி முத்து கண்னுக்கு அனிதா, கவிதா, அருண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி மூன்று மகள்கள் என விஜயகுமாருக்கு மொத்தம் ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

Advertisement

முதல் மனைவி முத்துக்கண்ணுவின் பிள்ளையான கவிதா விஜயகுமார் ‘கூலி’ என்ற படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார்.

அருண் விஜய் ஹீரோவாக நடித்து  சமீபத்தில் ‘யானை’ திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்த  வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பேருமே ஹீரோயின்களாக நடித்தவர்கள். ஆனால் இவர்களில் வனிதா மட்டுமே தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறார்.

தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதா விஜயகுமார் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்.

Advertisement

இவரை தவிர மற்ற நான்கு சகோதரிகளும் அவர்களுக்கு ஒரே சகோதரனான அருண் விஜயையும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை காட்டும் விதமாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவர்கள் ஒருவருக்கொருவர் அன்பும் அரவணைப்புமாக இருப்பது பார்ப்போரை  பொறாமைப்பட வைக்கிறது. இவர்களில் விஜயகுமாரின் ஐந்து பிள்ளைகளில் நான்கு பேர் சினிமாவில் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Advertisement

ஆனால் இதுவரை சினிமாவில் நடிக்காத ஒருவர் என்றால் அது அனிதா விஜயகுமார் மட்டும் தான். எனவே அவரைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர் கோகுல் கிருஷ்ணன் நின்ற மருத்துவரை 1997ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது இவர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார்.

Advertisement

சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அனிதா எப்பொழுதும் இணையதளத்தில் ஆக்டிவாக இருப்பார். இவர் தற்பொழுது தனது தந்தை விஜயகுமாரின் பிறந்தநாளை குடும்பமாக கொண்டாடிய அழகிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement