“அன்று தல அஜித்தை அவமானபடுத்திய​ உலக​ அழகி நடிகை” – இன்று ‘அஜித்தை சந்திக்க விரும்புகிறேன்’ என கூறியுள்ளார்..! – அப்படி என்ன நடந்தது தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அன்று தல அஜித்தை அவமானபடுத்திய​ உலக​ அழகி நடிகை” – இன்று ‘அஜித்தை சந்திக்க விரும்புகிறேன்’ என கூறியுள்ளார்..! – அப்படி என்ன நடந்தது தெரியுமா..?

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது மாஸ் ஆனா ஹீரோவாக வளம் வருபவர் நடிகர் அஜித் அவர்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. மேலும் தல அஜித்தின் இன்றைய மார்க்கெட் எந்த லெவலில் உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படம் வந்த காலக்கட்டத்தில் அவருக்கு அந்த அளவுக்கு மார்க்கெட் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அன்று வளரும் நடிகராகத்தான் இருந்தார்.

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் அஜித்தோடு உலக அழகி ஐஸ்வர்யா ராய், மம்முட்டி, தபு, அப்பாஸ் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் முதலில் அஜித்துக்கு ஜோடியாகத்தான் ஐஸ்வர்யா ராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் அஜித்துக்கு ஜோடியாக எல்லாம் நடிக்க முடியாது. மம்முட்டி அல்லது அப்பாசுக்கு ஜோடியாக வேண்டுமானால் ஜோடியாக நடிக்கிறேன் என்று கூறி விட்டார். இதனால் கதையில் சிறு மாற்றங்கள் செய்து ஐஸ்வர்யா ராயை மம்முட்டி ஜோடியாக மாற்றினார்கள்.

Advertisement

அதே போல படப்பிடிப்பு தளத்திலும் அஜித்தை யாரும் மதிக்கவே இல்லை. இதை பார்த்த மம்முட்டி இயக்குனரான ராஜிவ் மேனனை க டிந்து கொண்டாராம். ஒரு வளரும் நடிகரை இப்படி எல்லாம் நடத்த கூடாது என்றெல்லாம் கூறினாராம். பின்னர் கதையில் அஜித்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் மம்முட்டி மற்றும் ஐஸ்வர்யா ராயை சேர்த்து வைப்பதா அல்லது அஜித், தபுவை சேர்த்து வைப்பதாக என்ற குழப்பம் ஏற்பட்டது.

இறுதியில் மம்முட்டி, ஐஸ்வர்யா ராய் ஜோடியை சேர்த்து வைத்து படத்தை முடித்தார்கள். படம் வெளிவந்த பெரிய வெற்றியை பெற்றாலும், கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அண்மையில் ஐஸ்வர்யா ராய் சென்னையில் உள்ள ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்திருந்தார் அஜித் பற்றி பேசிய அவர், அஜித் மிகவும் அமைதியான ஒரு நல்ல மனிதர், அவர் வெற்றிகரமாக இருப்பது சந்தோஷம்,

Advertisement

அவரது ரசிகர்கள் துணை இருப்பது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. இதுபோன்ற வெற்றிக்கு அவர் மிகவும் தகுதியானவர், அவரது குடும்பத்தினரை கூட நான் ஒரு நாள் பார்த்துள்ளேன். இனி அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் வெற்றிக்கு நான் வாழ்த்து கூறுவேன் என்று பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in