CINEMA
16 வயதில் சன் மியூசிக்…! 21-ல் குழந்தை…! இப்போது ‘கிறுக்கு சிறுக்கி’ ஆல்பத்தில் அதிரடி கவர்ச்சி! விவாதப் பொருளாக மாறிய மகேஸ்வரியின் லேட்டஸ்ட் லுக்…!
இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்களும் கவர்ச்சி மாடல்களும் இணையத்தை ஆக்கிரமிப்பதற்கு முன்பாகவே, 90ஸ் கிட்ஸ்களின் கனவு தேவதைகளாக வலம் வந்தவர்கள் சன் மியூசிக் தொகுப்பாளினிகள். ஹேமா சின்ஹா, மகாலட்சுமி ஆகியோரின் வரிசையில், தனது 16 வயதிலேயே (11-ஆம் வகுப்பு படிக்கும் போது) சன் மியூசிக்கில் நுழைந்து ரசிகர்களைக் கவர்ந்தவர் விஜே மகேஸ்வரி. பின்னர் ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியும், பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றும் பிரபலமானார். 21 வயதிலேயே திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கு அம்மாவான மகேஸ்வரி, சமீபகாலமாகத் திரைப்படங்களிலும், மியூசிக் ஆல்பங்களிலும் சற்று கவர்ச்சியான தோற்றங்களில் நடித்து வருவது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கிறுக்கு சிறுக்கி’ என்ற வீடியோ ஆல்பத்தின் புரமோ ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. இதையொட்டி அவர் அளித்த பேட்டி ஒன்றில், அம்மாவான பிறகும் ஏன் இப்படி கவர்ச்சியாக நடிக்கிறீர்கள் என்ற விமர்சனங்களுக்கு செம போல்டாகப் பதிலடி கொடுத்துள்ளார். “அம்மாவான பிறகு ஏன் இப்படியெல்லாம் ஆடுறீங்க, நடிக்கிறீங்க எனக் கேட்பதெல்லாம் ரொம்பவே பூமர் தனமானது. இந்த காலத்து ஜென் ஸி (Gen Z) பிள்ளைகள் எல்லாம் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். எனக்கு என்ன பிடிக்குமோ, அதை மட்டும்தான் நான் செய்வேன்; எந்தளவுக்குக் கவர்ச்சி காட்ட வேண்டும் என்ற எல்லையும் எனக்குத் தெரியும்” என மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
அதே சமயம், சமூக வலைத்தளங்களில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்தும் அவர் தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார். “முன்பெல்லாம் எங்களைப் பொது வெளியில் பார்த்தால் மக்கள் மிகுந்த மரியாதை கொடுத்தார்கள். ஆனால் இப்போது சோஷியல் மீடியா புல்லிங் (Social media bullying) அதிகமாகிவிட்டது. என்னையும் என் மகனையும் கூட விட்டுவைக்காமல், ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலமாக ஆபாசமாகச் சித்தரித்து அசிங்கப்படுத்தினார்கள். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன். ரசிகர்களுடன் இணைப்பில் இருக்க சோஷியல் மீடியா உதவினாலும், அதே இடத்தில் ஏஐ மூலம் ஆபாச எண்ணங்களை விதைப்பது வேதனை அளிக்கிறது” என்று மகேஸ்வரி கூறியுள்ளார்.
