CINEMA
சிவாஜிக்கு பின் கமல் தான்… கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்த ‘தசாவதாரம்…”அவனை பார்த்தாலே பயமா இருக்கு…” ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆச்சி மனோரமாவை அலறவிட்ட ‘அந்த’ வெள்ளைக்காரன்…!
தமிழ் சினிமாவின் நடிப்புப் பல்கலைக்கழகம் என்று போற்றப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு, அந்த அரிய சிம்மாசனத்திற்கு மிகப்பொருத்தமானவர் உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமே. அவரது அசாத்திய நடிப்பில் வெளியான ‘ராஜ பார்வை’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’, ‘தசாவதாரம்’ போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்புத் திறமைக்குச் சில சிறு உதாரணங்கள் மட்டுமே ஆகும். தமிழ் சினிமாவில் அவர் ஏற்று நடிக்காத வேடங்களோ, சோதித்துப் பார்க்காத பரிசோதனைகளோ கிடையாது என்பது ஒட்டுமொத்தத் திரை உலகமும் அறிந்த ஒரு மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த நிலையில், கமலின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லான ‘தசாவதாரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை, அப்படத்தின் இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் கமல்ஹாசன் பத்து வெவ்வேறான வேடங்களில் நடித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமாவும் நடித்திருந்தார். படத்தின் ஒரு பாத்திரமாக கமல் ‘பிளெட்சர்’ என்ற வெள்ளைக்காரன் வேடமிட்டு நடித்தபோது, அந்த அசாத்திய மேக்கப்பில் இருப்பது கமல் தான் என்ற உண்மையை ஆச்சி மனோரமாவால் கண்டறியவே முடியவில்லையாம்.
இதுகுறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறும்போது, “ஒருநாள் படப்பிடிப்பின் போது மனோரமா ஆச்சி என்னிடம் வந்து, ‘தம்பி, அந்த வெள்ளைக்காரனைப் பார்த்தால் மட்டும் எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது; அவனை எங்கிருந்து பிடித்துக் கொண்டு வந்தீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு நான் சிரித்துக்கொண்டே, ‘ஆச்சி, அது நம்ம கமல் சார் தான்’ என்று கூறினேன். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், ‘அய்யய்யோ கமல் சாரா!’ என்று வியந்து, உடனடியாக அவரிடம் ஓடிச்சென்று ‘நீயாப்பா இது!’ எனக் கூறி உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீரே வடித்துவிட்டார். அந்த அளவிற்குத் தான் யார் என்றே அடையாளம் தெரியாத படி பாத்திரமாக மாறும் வித்தையில் கமல் சார் என்றும் கில்லாடி” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
