“கமல் சொன்ன அந்த ஒரு வார்த்தை..” கிளாமர் உடைகளால் வந்த சண்டை- ஊர்வசியின் சினிமா வாழ்க்கையை மாற்றிய உலகநாயகன்…!இயக்குநர்களை வெளுத்து வாங்கிய ஊர்வசி…! – cinefeeds
Connect with us

CINEMA

“கமல் சொன்ன அந்த ஒரு வார்த்தை..” கிளாமர் உடைகளால் வந்த சண்டை- ஊர்வசியின் சினிமா வாழ்க்கையை மாற்றிய உலகநாயகன்…!இயக்குநர்களை வெளுத்து வாங்கிய ஊர்வசி…!

Published

on

திரையுலகில் உச்சத்தில் இருந்தபோதே அரசியலில் தடம் பதித்த உலகநாயகன் கமல்ஹாசனுக்கு, அங்கே எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் சினிமாவுக்கே திரும்பிய அவர், தனது தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்தார். வேற்று மொழித் திரைப்படங்களின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் அதிகமாக இருந்த காலகட்டத்தில் வெளியான ‘விக்ரம்’, மெகா பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று தமிழ் சினிமாவுக்கு பெரும் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. இந்த இமாலய வெற்றி கமலின் இரண்டாவது இன்னிங்ஸிற்கு மிகச்சிறந்த ‘தரமான கம்பேக்’ ஆக அமைந்தது.

ஆனால், இந்த உற்சாகத்தோடு அவர் தேர்ந்தெடுத்த அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தன. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன் 2’ மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘தக் லைஃப்’ ஆகிய திரைப்படங்கள் கடுமையான ட்ரோல்களையும், வசூல் ரீதியாக தோல்வியையும் சந்தித்தன. சீனியர் இயக்குநர்களின் படங்கள் சறுக்கியதைத் தொடர்ந்து, கமல் தற்போது இளம் திறமையாளர்களை நம்பிக் களம் இறங்கியுள்ளார். அதன்படி, எச். வினோத் படத்திலிருந்து விலகிய அவர், தற்போது அன்பறிவ் இயக்கத்திலும், அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இணையும் ஒரு புதிய படத்திலும் நடிக்க கமிட்டாகி மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

Advertisement

இத்தகைய சூழலில், கமலுடன் பல படங்களில் இணைந்து நடித்த முன்னணி நடிகை ஊர்வசி, சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல் குறித்துப் பகிர்ந்துள்ள சுவாரசியமான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆரம்பகால சினிமா அனுபவங்கள் குறித்துப் பேசிய ஊர்வசி, “காதல் காட்சிகளிலும், நெருக்கமான காட்சிகளிலும் நடிக்கும்போது நான் மிகவும் கூச்சப்படுவதாக கமல் என்னிடம் கூறுவார். அந்த காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும்போது கிளாமராக நடிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால், தனிப்பட்ட முறையில் அந்த உடைகள் எனக்கு சவுகரியமாக இல்லை, அது என்னை மிகவும் பாதித்தது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “என்னுடைய இந்த சங்கடத்தைப் புரிந்துகொண்ட கமல்ஹாசன், ‘உங்களுக்கு மலையாளத்தில் நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் தாராளமாக கமிட் ஆகி நடியுங்கள்’ என்று எனக்கு அறிவுரை வழங்கினார். அவரது பேச்சைக் கேட்டுத்தான் நான் மலையாள சினிமாக்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதன் பிறகு தெலுங்கு சினிமாவுக்குச் சென்றபோதும் காஸ்ட்யூம் விஷயத்தில் பல இயக்குநர்களுடன் எனக்கு சண்டையே வந்திருக்கிறது” என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். கமலுடன் ‘அந்த ஒரு நிமிடம்’, ‘மைக்கேல் மதன காம ராஜன்’, ‘உத்தம வில்லன்’ போன்ற பல படங்களில் நடித்துள்ள ஊர்வசி, தற்போது ஜெயராமுடன் இணைந்து பாண்டிராஜ் இயக்கத்தில் ‘பரிமளா அண்ட் கோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in