தடுத்தும் கேட்காத விமானி…!! திருமணமான சில மணி நேரத்தில் இந்திய வம்சாவளி மணமகன் இறப்பு…. அதிர்ச்சியில் உறைந்த மணப்பெண்…. கோர சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தடுத்தும் கேட்காத விமானி…!! திருமணமான சில மணி நேரத்தில் இந்திய வம்சாவளி மணமகன் இறப்பு…. அதிர்ச்சியில் உறைந்த மணப்பெண்…. கோர சம்பவம்…!!

Published

on

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் குடியேறிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்தவர் டேவ் பிஜி (25). டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாகப் பணிபுரிந்து வந்த இவருக்கும், நர்ஸாகப் பணிபுரியும் ஜெஸ்னி என்ற பெண்ணுக்கும் டாவ்சன்வில் பகுதியில் உள்ள ‘தி ரெவெர்’ என்ற இடத்தில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி இரவு 9 மணியளவில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதுமணத் தம்பதியினர் சொகுசு ஓட்டலுக்குச் செல்வதற்காக ஹெலிகாப்டரில் பயணிக்கத் திட்டமிட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கடும் பனிமூட்டமும், மழையும் பெய்து வானிலை மோசமடைந்ததால், அனுபவம் வாய்ந்த விமானியான டேவ் பிஜி பறப்பதற்கு மறுப்பு தெரிவித்தார். எனினும், ஹெலிகாப்டரை இயக்க வந்த மாற்று விமானி, அதிக உயரத்தில் பறந்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக்கூறி தம்பதியினரைச் சமரசம் செய்து அழைத்துச் சென்றுள்ளார்.

Advertisement

அடர்ந்த காடுகள் மற்றும் மலைகள் நிறைந்த பகுதிக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருந்தபோது, மோசமான வானிலை காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து திடீரென விபத்துக்குள்ளாகி மரங்களின் மீது மோதி நொறுங்கியது. இந்த கோர விபத்தில் மணமகன் டேவ் பிஜியும், ஹெலிகாப்டரை ஓட்டி வந்த விமானியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து நடந்த மலைப்பகுதிக்கு மீட்புக் குழுவினர் வருவதற்குச் சுமார் 5 மணி நேரம் தாமதமான நிலையில், படுகாயமடைந்த மணமகள் ஜெஸ்னி இடிபாடுகளுக்கு இடையே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். ஒரு நர்ஸான ஜெஸ்னி மயக்கம் தெளிந்து பார்த்தபோது, தன் மார்பில் சாய்ந்திருந்த கணவர் டேவ்வின் நாடித்துடிப்பைப் பரிசோதித்து அவர் இறந்துவிட்டதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தார்; தற்போது அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in