தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…! “நாளை தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒன்றானாலும் ஆச்சரியமில்லை… ” எக்ஸ் தளத்தில் சண்முகம் வெளியிட்ட அதிரடி அறிக்கை….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…! “நாளை தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒன்றானாலும் ஆச்சரியமில்லை… ” எக்ஸ் தளத்தில் சண்முகம் வெளியிட்ட அதிரடி அறிக்கை….!!

Published

on

தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது ஒரு புதிய விவாதம் எழுந்துள்ளது. த.வெ.க-விற்குத் தங்களது ஆதரவை வழங்கியதன் மூலமாக, தி.மு.க-வின் மறைமுகத் துணையோடு அ.தி.மு.க மீண்டும் அரியணை ஏறும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அதிரடியான கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

இதற்குப் பதில்டி கொடுக்கும் வகையில் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கடந்த காலங்களில் இதே கம்யூனிஸ்டுகள் அ.தி.மு.க-வுடன் கைகோர்த்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றப் பதவிகளைப் பெறவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அ.தி.மு.க ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்றும், ஒருவேளை தாங்கள் அவர்களுடன் கூட்டணி வைத்திருந்தாலும் அதில் என்ன உலக மகா தவறு இருக்கப் போகிறது என்றும் ஆவேசமாக வினவியுள்ளார்.

Advertisement

இதற்குத் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கம் வாயிலாக மீண்டும் பதிலளித்துள்ள சி.பி.எம் சண்முகம், கொள்கை மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளையும் ஒன்றாகக் கருத முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேசமயம், தற்காலத் திராவிடக் கட்சிகள் தங்களின் பழைய விழுமியங்களை மறந்து, வெறும் தேர்தல் அரசியலுக்காகவும் ஓட்டுகளுக்காகவும் சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் களத்தில் நின்று போராடாமல் பல சமரசங்களைச் செய்து கொண்டு தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ளன என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தச் சீரழிந்த நிலையின் தொடர்ச்சியாக, வருங்காலத்தில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒன்றிணைந்து ஒரே இயக்கமாகச் செயல்பட்டால் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் அவர் தனது பதிவில் மிகத் துணிச்சலாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in