CINEMA
ஷூட்டிங் ஸ்பாட்டுல நான் பாக்யராஜ் மூஞ்சியை பார்க்கவே மாட்டேன், எங்கேயோ பார்த்துட்டு தான் டயலாக் பேசுவேன், 3 படங்களில் அவருடன் நடித்த பிரபல நடிகை இப்படி சொல்லிட்டாங்களே?
இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில், 3 படங்களில் அவருடன் இணைந்து ஜோடியாக நடித்தவர் ராதிகா சரத்குமார். அதில் தாவணிக் கனவுகள் இன்றுபோய் நாளை வா பொய் சாட்சி என 3 படங்களில் கே பாக்யராஜூம் ராதிகாவும் இணைந்து நடித்திருந்தனர்.அத்துடன் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் ராதிகா நடிகையாக அறிமுகமான கிழக்கே போகும் ரயில் படத்தில் உதவி இயக்குனராக பணி செய்தவரும் கே பாக்யராஜ். முதல் படத்தில் நடிகை ராதிகாவுக்கு நடிப்பு வசனங்கள் சொல்லிக் கொடுத்ததும் கே பாக்யராஜ்தான்.
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது, கே பாக்யராஜூடன் அதிக படங்களில் நடித்தது நான்தான். நானும் கே பாக்யராஜூம் நடித்த படங்களை நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால் தெரியும். நானும் அவரும் நடிக்கும் காட்சிகளில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பேச மாட்டோம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து டயலாக் பேச மாட்டோம். நான் சிரிப்பேன். என்னை பார்த்து அவர் சிரிப்பார்.
அதனால் ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்த்துக்கவே மாட்டோம். நான் எங்கேயோ பார்த்து பேசுவேன். அப்புறம் அவர் குளோசப் போயிடுவார். பழைய படங்கள் எல்லாம் பார்த்தால் அது நன்றாக தெரியும். இன்று போய் நாளை வா படத்தில் மட்டுமே கொஞ்சம் முகம் பார்த்து பேசி நடித்திருப்போம் என்று நடிகை ராதிகா சரத்குமார் அந்த விழாவில் பேசியிருக்கிறார். இதை பார்வையாளர் பகுதியில் இருந்த கே பாக்யராஜூம் தலையசைத்து ஆமோதித்தாா்.
