CINEMA
பிரபல சீனியர் நடிகை மகளுக்கு இப்படி ஒரு கொடிய நோயா? சொக்கத்தங்கம் படத்துல விஜயகாந்துக்கு தங்கச்சியாக நடிச்சவராச்சே – அப்செட் ஆன தமிழ் சினிமா ரசிகர்கள்!
கடந்த 1980 – 90களில் பல படங்களில் நடித்தவர் நடிகை சுமித்ரா. கன்னிராசி வலிமை சுந்தர் சி படங்களில் அம்மாவாக நடித்திருந்தார். மூத்த நடிகையான சுமித்ராவின் மகள் உமா 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தார். வீரநடை என்ற படத்தில் அறிமுகமான நடிகை உமா கைகலப்பு குபேரன் கடல் பூக்கள் தென்றல் கோவை பிரதர்ஸ் இலக்கணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குறிப்பாக சொக்கத்தங்கம் படத்தில் விஜயகாந்தின் தங்கையாக நடித்திருந்தார்.
அவருக்கு சினிமா வாய்ப்பு குறைந்ததால் சில டிவி சீரியல்களில் நடித்தார். அதன்பின்பு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை உமா தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, எனக்கு ஆரம்பகட்ட மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சி மறுப்பு நம்ப முடியாத நிலை என பல உணர்வுகள் இருந்தாலும் இதை ஜீரணிப்பதும் ஏற்றுக் கொள்வதும் எளிதானது அல்ல.
வாழ்க்கையை அதன் யதார்த்த வடிவத்தில் எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளவே முயற்சிக்கிறேன். ஒவ்வொரு நாளையும் தனித்தனியாக எதிர்கொள்ளப் போகிறேன். என்னிடம் உள்ள முழு வலிமையையும் கொண்டு இதை எதிர்த்து போராட போகிறேன். நிச்சயம் குணமடைந்து மீண்டு வருவேன் என்று உறுதியளிக்கிறேன். தயவுசெய்து எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த பயணத்தில் உங்கள் ஆசிர்வாதங்களை வேண்டுகிறேன் என்று அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
