CINEMA
அவரு குடிக்கு அடிமையாகிவிட்டார்…. வாழ்க்கை நாசமா போச்சு…. நடிகை சுமித்ரா உருக்கம்…!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 70 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சுமித்ரா,இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவாஜி, கமல், ரஜினிகாந்த் என அனைவருடனும் ஹீரோயினாக நடித்துள்ளார் . 90களில் இவருக்கு பெரிய அளவில் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை .
ஆதலால் குணச்சித்திர கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார் சுமித்ரா , கமல் மற்றும் ரஜினிக்கு ஹீரோயினாக நடித்தது மட்டுமில்லாமல் அவர்களுக்கு அம்மாவாகவும் நடித்து மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகையாவார். இவர் கன்னட இயக்குனரான ராஜேந்திர பாபுவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு உமா சங்கரி மற்றும் நக்சத்ரா என இரண்டு மகள்கள் உள்ள நிலையில் ராஜேந்திர பாபு இறந்துவிட்டார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சுமித்ரா, வாழ்க்கை நல்லா தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் கடைசியில் என் கணவர் குடிக்கு அடிமையாகி விட்டார். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய உடல் நிலை மோசமாகிவிட்டது என்று உருக்கமாக பேசியுள்ளார்.