எனக்கு அப்படி ஒரு நோய் இருக்குது, 34 ஆண்டுகளாக அந்த நோயோடு போராடிக்கிட்டு இருக்கேன் – பிரபல நடிகர் இப்படி சொல்லிட்டாரே? அதிர்ந்து போன ரசிகர்கள்! – cinefeeds
Connect with us

CINEMA

எனக்கு அப்படி ஒரு நோய் இருக்குது, 34 ஆண்டுகளாக அந்த நோயோடு போராடிக்கிட்டு இருக்கேன் – பிரபல நடிகர் இப்படி சொல்லிட்டாரே? அதிர்ந்து போன ரசிகர்கள்!

Published

on

actor Vishnu vishal

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் அவர் நடித்த கட்டாகுஸ்தி 2 படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம். முதலில் உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றி. சமீபத்தில் என்னுடைய பதிவு அனைத்திலும் நீங்கள் சொன்ன அத்தனை கமெண்ட்ஸ்களையும் நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது.

அதனால் இந்த விஷயத்தை உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சமீப காலமாக என் முகம் சோர்வாக இருப்பது போல இருப்பதை பலர் கவனித்திருக்கிறீர்கள். அதற்கு காரணம் ஆட்டோஇம்யூனோ என்ற ஒரு நோயால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். கடந்த 34 ஆண்டுகளாக நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதற்காக டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துகளை இடையிடையே எடுத்துக்கொண்டு வருகிறேன்.

Advertisement

அந்த மருந்துகளின் பக்க விளைவுதான் இந்த சோர்வு. ஆனால் தற்போது நான் மேற்கொண்டு வரும் இந்த சிகிச்சை என் உடல் நலத்திற்கு மிகவும் அவசியமானது. உடல்நிலை சவால்கள் இருந்த போதிலும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். உடல்நிலை விரைவில் குணமாகி விடும். நீங்கள் காட்டிய அக்கறை என்னை இன்னும் சிறப்பாக என் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள ஊக்குவித்துள்ளது என்று அதில் நடிகர் விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in