LATEST NEWS
காலையிலேயே ஷாக்..! தவெக கூடாரத்தை காலி செய்து அதிமுகவில் ஐக்கியம்.. குஷியில் துள்ளிகுதிக்கும் எடப்பாடி…!!
தமிழக அரசியல் களத்தில் கட்சி மாறுதல்களும், தாய் கழகத்திற்கு திரும்புவதும் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். தவெகவிலிருந்து விலகிய குறிச்சி மணிமாறன் மற்றும் எஸ்.ஜெகத்குமார் ஆகியோர் சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டனர். தவெக தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே அதிலிருந்து விலகி, அவர்கள் மீண்டும் தங்களின் பழைய இயக்கமான அதிமுகவிற்கே திரும்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இவர்களுடன் இணைந்து, மதிமுகவைச் சேர்ந்த மோப்பிரிபாளையம் பேரூராட்சிச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி வரும் நிர்வாகிகளை வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தலை நோக்கி கட்சிகள் நகர்ந்து வரும் சூழலில், கோவையில் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
