LATEST NEWS
“கோட்டை ரகசியம் ஆந்திராவுக்கு போகுதா..?” முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி வைத்த செக்.. டிஜிபி ஆபீஸில் வெடித்த அடுத்த அணுகுண்டு..!!
தமிழக அரசின் அமைச்சரவை மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழக அரசின் மிக முக்கிய கொள்கை முடிவுகள் மற்றும் நிர்வாக விவகாரங்கள் விவாதிக்கப்படும் இத்தகைய ரகசியக் கூட்டங்களில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் கலந்துகொள்வது சட்டப்படி குற்றமாகும் என்று அவர் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அதிகாரப்பூர்வமற்ற இந்த நபர்களின் தலையீட்டால் அரசு சார்ந்த மிக முக்கிய ரகசியங்கள் கசியும் அபாயம் உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
திமுகவின் இந்த அதிரடி புகார், தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஒரு புதிய அரசியல் நெருக்கடியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அரசின் உயர்மட்ட முடிவுகளில் வெளிநபர்களின் ஆதிக்கம் இருப்பதாகக் கிளம்பியுள்ள இந்த விவகாரம், அரசியல் வட்டாரத்தில் மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சட்டமன்றத் தேர்தலை நோக்கி அரசியல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், திமுகவின் இந்த சட்டப்பூர்வ நகர்வு தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
