LATEST NEWS
BREAKING: வீடு புகுந்து சகோதரரை தாக்கிய வழக்கு.. அமைச்சர் மரிய வில்சன் நாளை ஆஜராக உத்தரவு..!
சொந்தச் சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து கட்டையால் தாக்கிய கொலை முயற்சி வழக்கில், தவெக அரசைச் சேர்ந்த அமைச்சர் மரியா வில்சன் நாளை நீதிமன்றத்தில் ‘கட்டாயம்’ ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் புதுச்சேரியில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் புகுந்து, இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டதாக மரியா வில்சன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் மரியா வில்சன் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், நீதிமன்ற உத்தரவை மதித்து அவர் நாளை ஆஜராவார் என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போதைய ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் கொலை முயற்சி வழக்கில் நேரில் ஆஜராக நீதிமன்றம் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளது எதிர்க்கட்சியினருக்குப் பெரும் அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. இந்தச் சம்பவம் புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
