LATEST NEWS
அவதூறு பேச்சுக்கு கைது செய்வதா..? அனிதா ராதாகிருஷ்ணன் கைது காட்டுமிராண்டித்தனமானது…. கொந்தளித்த ஆர்.எஸ் பாரதி..!!
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்த சில மணி நேரங்களிலேயே, ஆத்தூர் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்த அவரை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதற்குக் கண்டனம் தெரிவித்து திமுக தொண்டர்கள் காவல் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்தக் கைது நடவடிக்கைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் மேடைகளில் பேசப்படும் அவதூறு பேச்சுக்காக ஒரு முன்னாள் அமைச்சரை இந்த அளவிற்கு அவசர கதியில் கைது செய்வது என்பது முற்றிலும் காட்டுமிராண்டித்தனமானது என்று அவர் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்க நினைக்கும் இந்தச் செயல் சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும், இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
