LATEST NEWS
“அமைச்சர் பதவி உங்களுக்கு காத்திட்டு இருக்கு” தவெகவுக்கு வந்துருங்க… சி.விஜயபாஸ்கர் அழைத்ததாக ஓ.எஸ் மணியன் பகீர் குற்றசாட்டு..!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகத் தங்களை இழுக்க முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் குதிரை பேர முயற்சியில் ஈடுபட்டதாக அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த சி. விஜயபாஸ்கர், தன்னைத் தொலைபேசியில் அழைத்து தவெகவில் இணையுமாறு கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “உங்களுக்கு அமைச்சர் பதவி காத்திருக்கிறது” என ஆசை காட்டியதாகவும், அதற்குத் தான், “அந்தப் பதவியையும் சேர்த்து நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அழைப்பை நிராகரித்துவிட்டதாகவும் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
தவெகவுக்கு அணி சேர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தொலைபேசி அழைப்பு மற்றும் அமைச்சர் பதவிக்கான பேரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிமுக தலைவர்கள் வழக்கு பயம் காரணமாகவே தவெகவுக்குத் தாவி வருவதாக அதிமுக தரப்பில் விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில், ஓ.எஸ். மணியனின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு தவெக மற்றும் அதிமுக இடையிலான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
