LATEST NEWS
BIG BREAKING: தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது..! சவரன் எவ்வளவு தெரியுமா?…
கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது திடீரென அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சிறு ஏற்றத்தின் காரணமாக, உள்ளூர் சந்தையிலும் இந்த விலை உயர்வு எதிரொலித்துள்ளது.
தமிழகத் தலைநகரான சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. இந்த உயர்வின் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.13,320-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,560-க்கும் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள போதிலும், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி அதே நிலையில் நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் தற்பொழுது விற்பனையாகி வருகிறது.
