LATEST NEWS
“அப்படியென்றால் களவாணி யார்?” 6 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவுக்கு பின்னணியில் களவாணித்தனம்.. வெடித்தது புதிய அரசியல் சர்ச்சை..!!
அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்ததே ஒரு களவாணித்தனம்தான் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பிள்ளை பிடிப்பது போல மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.,க்களைத் தன்பக்கம் இழுக்கும் இத்தகைய அரசியல் போக்கை விஜய் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். “அப்படியென்றால் களவாணி யார்?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் விஜய் தற்போதைய அரசியல் சூழலில் ‘Reel less; Work more’ என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்று தினகரன் அறிவுறுத்தியுள்ளார். சினிமா பாணியில் வெறும் ரீல் விடுவதை விடுத்து, மக்கள் நலன் சார்ந்த உண்மையான ஆட்சி நிர்வாகத்தில் அவர் முழு அக்கறை மற்றும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
