“EPS பிளான் A, அண்ணாமலை பிளான் B” இப்போ அந்த நடிகர் பிளான் C.. தனுஷை மறைமுகமாக சாடி மாணிக்கம் தாகூர் காட்டம்.. தமிழக அரசியலில் புதுப்பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“EPS பிளான் A, அண்ணாமலை பிளான் B” இப்போ அந்த நடிகர் பிளான் C.. தனுஷை மறைமுகமாக சாடி மாணிக்கம் தாகூர் காட்டம்.. தமிழக அரசியலில் புதுப்பரபரப்பு..!!

Published

on

தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த பாரதிய ஜனதா கட்சி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தனது திட்டத்திற்குள் கொண்டுவர பாஜக முயன்றதாகவும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் ‘பி’ திட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது ‘சி’ திட்டமாக (Plan C) ஒரு நடிகரைத் தயார்படுத்தி வருவதாகக் கூறி, அண்மையில் தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட வெள்ளி விளக்குகளில் தாமரை முத்திரை இருந்த சர்ச்சையை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசியலில் குழப்பத்தை விளைவிக்கவே இத்தகைய வியூகங்களை பாஜக வகுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in