பதறவைக்கும் துயரம்..! பாலியல் புகாரில் விசாரணைக்கு வந்த போலீஸ்… பயத்தில் 3-வது மாடியிலிருந்து குதித்த அரசு ஓட்டுநர் ரத்த வெள்ளத்தில் பலி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பதறவைக்கும் துயரம்..! பாலியல் புகாரில் விசாரணைக்கு வந்த போலீஸ்… பயத்தில் 3-வது மாடியிலிருந்து குதித்த அரசு ஓட்டுநர் ரத்த வெள்ளத்தில் பலி..!!

Published

on

சென்னை புழல் அருகே கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டியன் (42) என்ற அரசு ஓட்டுநர், போலீஸ் விசாரணைக்கு பயந்து மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு வணிக வரித்துறை அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவர் மீது, பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக போலீசார் ராஜபாண்டியனின் வீட்டிற்குச் சென்றனர். அப்போது போலீசாரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அவர், தப்பி ஓடும் முயற்சியில் தனது வீட்டின் மூன்றாவது மாடிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து அருகிலுள்ள ஒரு வீட்டின் மேற்கூரை மீது அவர் திடீரென குதித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

அவர் குதித்த வேகத்தில் அந்த வீட்டின் மேற்கூரை உடைந்து விழுந்ததில், ராஜபாண்டியன் பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in