BREAKING: முதல்வர் விஜய் துறையில் டெண்டர் முறைகேடு சர்ச்சை… விதிமீறல் புகாரால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: முதல்வர் விஜய் துறையில் டெண்டர் முறைகேடு சர்ச்சை… விதிமீறல் புகாரால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!

Published

on

தமிழக முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சித் துறையில், பல்வேறு பணிகளுக்கான டெண்டர் விடுவதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. நகராட்சித் துறையின் பொதுவான விதிமுறைகளின்படி, குறுகிய கால டெண்டர் கோரப்படும்போது விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம் 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது செங்கம், கோத்தகிரி மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய நகராட்சிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு பணிகளுக்கான டெண்டர்களுக்கு வெறும் 1 முதல் 4 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விதிமுறைகளுக்குப் புறம்பாக மிகக் குறுகிய கால அவகாசத்தில் அவசர அவசரமாக இந்த டெண்டர்கள் கோரப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. முதல்வர் விஜய்யின் நேரடிப் பார்வையில் இயங்கும் மிக முக்கியத் துறையிலேயே இத்தகைய டெண்டர் முறைகேடு மற்றும் விதிமீறல் நடந்துள்ளதாகக் கூறப்படுவது தற்போதைய அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in