“ரூ.350 கோடிக்கு ஜெ. இல்லத்தை வாங்குகிறாரா விஜய்?.. பின்னணியில் இருக்கும் ரகசியம்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு”..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ரூ.350 கோடிக்கு ஜெ. இல்லத்தை வாங்குகிறாரா விஜய்?.. பின்னணியில் இருக்கும் ரகசியம்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு”..!!

Published

on

சென்னை போயஸ் கார்டன் என்றாலே நினைவுக்கு வரும் ‘வேதா நிலையம்’ இல்லம் குறித்து ஒரு அதிரடி தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக முதல்வர் விஜய், இந்த இல்லத்தை எப்படியாவது தன்வசப்படுத்த திட்டமிட்டு, அதற்காக ₹350 கோடி அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும், இணையவாசிகள் மத்தியிலும், அரசியல் தளங்களிலும் தற்போதைய ஹாட் டாப்பிக் இதுதான். தற்போது முதல்வர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தினமும் சுமார் 17 கிலோமீட்டர் தூரம் பயணித்து தலைமைச் செயலகத்திற்கு சென்று வருகிறார். இதனால் அவரது பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொள்ளும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக, காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையான நெரிசலையும் சிரமங்களையும் எதிர்கொள்கின்றனர்.

இந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், தலைமைச் செயலகத்திற்கு எளிதாகச் செல்லவும் ஏதுவாக, அருகில் உள்ள போயஸ் கார்டன் பகுதிக்கு குடியேறினால் தூரம் 8 கிலோமீட்டராக குறையும் என்பதால் முதல்வர் தரப்பில் இந்த ஆலோசனை முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசியலின் முக்கிய அடையாளமாகக் கருதப்படும் போயஸ் கார்டனில் உள்ள இந்த இல்லம் தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவருடன் தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும், இத்தொகை மற்றும் இல்லம் வாங்குவது குறித்த விவகாரங்களை அரசு தரப்போ, முதல்வர் விஜய் தரப்போ அல்லது வேதா நிலையத்தின் சட்டப்பூர்வ உரிமையாளர்களோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதனால் இந்தச் செய்தி தற்போதைக்கு அரசியல் வட்டாரத்தில் பரவி வரும் ஒரு பரபரப்பான யூகமாகவே நீடிக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in